த.வெ.க மீது தாக்குதல் – விஜய் கண்டனம்..!

Advertisements

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் சென்னை பாரிமுனையில் த.வெ.க கட்சியினர் மீது தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதில், பாரிமுனையில் கள ஆய்வில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி, உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயமும், சிகிச்சை பெற்று வரும் மேலும் நான்கு பேரும் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்தார்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது என்றும் கூறினார். இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *