சர்வதேச நாடுகளை அமெரிக்கா மிரட்டுவதாக குற்றச்சாட்டு.!

ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை அமெரிக்கா மிரட்டுகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை முடக்கினால் உக்ரைன், ரஷ்யா போர் நின்று விடும் என கருதிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்கவே, மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்றும் வரி தடைகள் வாயிலாக உலகப் பொருளாதாரத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்றும் கூறினார்.

மலிவான ரஷ்ய எரிபொருளை தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை விற்க அந்நாடு முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவுக்கான வரியை குறைத்துள்ள அதிபர் டிரம்ப்,ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதையே நிபந்தனையாக விதித்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *