புல்லட் இரயிலில் பிரதமர் மோடி பயணம்!

Advertisements
ஜப்பானில் 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் இரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்றார். பின்னர் பிரதமர் மோடிக்கு இந்திய வாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, டோக்கியோவில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்திக்க ஜப்பான் பிரதமருடன், பிரதமர் மோடி E5 ஷின்கன்சனின் எனும் அதிகபட்ச வேகம் கொண்ட மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் இரயிலில் செண்டாய் நகரத்திற்குச் சென்றார். மேலும், ஜப்பானில் இன்னும் சோதனைகளில் உள்ள E10 ஷின்கன்சன் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் புல்லட் இரயில் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் இந்த இரயில் திட்டத்தை இந்தியாயில் இயக்க ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *