
விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகி விட்டாரா என்பதை அறிய தவெக அலுவலகத்தை எட்டி பார்த்தபோது கிடைத்தத் தகவல்கள் இதோ.
2026 இல் திமுக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் எனத் தவெக சார்பில் சி.டி.ஆர், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் என மாறி மாறிப் பேசி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்த கையோடு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வையும் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜனநாயகன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பதை பார்ப்போமா.

மாதம் ஒரு அரசியல் நிகழ்வை நடத்தி பேசுபொருளாகி பின் சீனிலேயே இல்லாமல் மறைந்துவிடும் விஜய் கூடவே இன்னொரு விஷயத்தையும் மறந்துவிட்டார். கட்சி ரீதியாக 120 மாவட்டங்களைப் பிரிக்கிறோம் எனக் கூறியிருந்தார். அப்படி பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களில் 114 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்க்களை மட்டுமே அறிவித்தார். ஒவ்வொரு கட்டத்துக்கும் 19 மாவட்டசெயலாளர்க்கள் என 6 கட்டங்களாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அறிவிப்பை வெளியிட்டார்.
கடைசியாக மார்ச் 13 ஆம் தேதி 6 ஆம் கட்டமாக நிர்வாகிகளைச் சந்தித்திருந்தார். அதன்பிறகு எஞ்சியிருக்கும் மாவட்ட செயலாளர்க்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இன்னும் 6 மாவட்ட.செயலாளர்க்களை அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மாவட்ட.செயலாளர்க்களில் திருநெல்வேலியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவருக்குப் பதிலாகவும் யாரையும் இன்னும் அறிவிக்கவில்லை. இடையில் இன்னொரு முடிவில் வேறு இருந்தனர்.
அதாவது சில இடங்களில் குழப்பம் நீடிப்பதால் இன்னும் கூடுதலாக 10- முதல் 15 மாவட்ட செயலாளர்க்களை நியமிக்கும் வகையில் மாவட்டங்களைப் பிரிக்கலாம் எனும் முடிவில் இருந்தனர். ஆனால், அந்த மார்ச் 13 க்குப் பிறகு இது சம்பந்தமாக எந்த அப்டேட்டும் இல்லை. எஞ்சியிருக்கும் மாவட்ட செயலாளர்க்கள் அறிவிப்பை அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார் விஜய்.தூத்துக்குடி, தென்காசி, சென்னை துறைமுகம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு இன்னும் நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும். எல்லா பக்கத்திலுமே எதோ ஒரு முட்டுக்கட்டை இருப்பதாகக் கூறுகின்றனர். பல கோஷ்டிகளின் மோதலால் உட்கட்சி பூசலால் ஆரம்பத்திலிருந்தே புகைந்து வந்த தூத்துக்குடி தவெக, இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது.
இதைப் பற்றி விஜய்யின் கட்சி அலுவலகம் சொல்வது எஞ்சியிருக்கும் சில மாவட்டங்களில் பிரச்சனைகளும் குழப்பங்களும் இருந்தது உண்மைதான். ஆனால், ஆனந்த் அண்ணன் எல்லாரையும் அழைத்துப் பேசிப் பஞ்சாயத்துகளை சுமூகமாக முடித்துவிட்டார். எஞ்சியிருக்கும் மாவட்ட செயலாளர்க்களின் பட்டியல் கூடக் கையில் ரெடியாக இருக்கிறது. அறிவிப்பு வராவிட்டாலும் சில மாவட்டங்களில் நிர்வாகிகளை இறங்கி வேலை பாருங்கள் என ஆனந்த் அண்ணன் வாய்மொழியாக உத்தரவு இட்டுவிட்டார்.’ என்கின்றனர்.’விஜய் தன்னுடைய கடைசிப் படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிலும் அதுசம்பந்தமான பணிகளிலும் பிஸியாக இருந்தார். பொதுக்குழு, ஆண்டு விழா போன்றவற்றை நடத்தியே ஆக வேண்டும் என்பதால்தான், நேரமில்லையென்றாலும் நெருக்கடிக்கு இடையே நடத்தினார். இப்போது சூட்டிங் எல்லாம் முடிந்திருப்பதாகத் தெரிகிறது. இனி முழுக்க முழுக்க அரசியல்தான். என்கிறது இன்னொரு தரப்பு.

மேலும், ஜூலையிலிருந்து விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கும் திட்டமிட்டிருக்கிறார்களாம். மண்டலம் மண்டலமாகப் பிரித்து ஜூலையிலிருந்து மொத்தம் 120 நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு திட்டத்தைத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம்.அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ரெக்கார்ட் கொண்ட மத்திய மண்டலத்தின் திருச்சியிலிருந்தோ அல்லது தென் மண்டலத்தில் மதுரையிலிருந்தோ சுற்றுப்பயணத்தை தொடங்குவதுதான் பிளான். அந்தச் சுற்றுப்பயணத்துக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்துதான் அடுத்தக்கட்ட பிரசார யுக்திகளும் கூட்டணி சம்பந்தமான விவகாரங்களையும் தீர்மானிக்கும் முடிவில் இருக்கிறோம். என்கின்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய்யின் வருகை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் முழுமையாக அரசியல் களத்தில் இறங்கி விட்டால் என்ன செய்யபோகிறார் என்பது புரியவில்லை. சில கருத்துக் கணிப்புகள் விஜய்யிக்கு 22 சதவிகித வாக்குகள் கிடைக்கு என்கிறது. இதனால் ஆளும் திமுக அரசு 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வீட்டுக்குதான் போகும் என்கிறார்கள். இதை ஸ்டாலின் உடைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– செய்தித்தொகுப்பு : குட்டி கண்ணன், Gem TV


