பெட்டி படிக்கை எல்லாம் கட்டி ரெடி தான்- வைகோவை வறுத்தெடுத்த மல்லை சத்யா.!

டாக்டர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்தநாளை முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பல்வேறு கட்சி நிர்வாகிகளும் தங்களுடைய மரியாதைய செலுத்துனாங்க. அந்த நிகழ்வில், கலந்துகொண்ட மல்லை சத்யா கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மரியாதை செலுத்துன பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று கொடுத்தாங்க. அவர் குடுத்த அந்த பேட்டி  தான் இப்போ அரசியல் வட்டாரத்துல பரப்பரப்ப கிளப்பி இருக்கு….

மாநில முதலமைச்சர்கள் தான் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை மீட்டெடுத்தது, கைரிக்ஷா ஒழிப்பு, மறுவாழ்வு இல்லங்கள், மற்றும் ஜாதி மோதல்களுக்கு அப்பால் சமூகம் ஒன்றிணைவதற்காகச் சமத்துவபுரங்களை உருவாக்கியது என கலைஞரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை அவர் பட்டியலிட்டார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தாலும் எதிர்கட்சியா கம்பீரமா தலை நிமிர்ந்து நிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தேவை முடிந்தவுடன் நண்பன் எதிரியாகுவதும் துரோகி ஆவதும் தேவை தொடங்குகின்ற போது துரோகி நண்பனாகுவதும் அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்னு சொன்னாரு மல்லை சத்யா. அதைத்தொடர்ந்து,
உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடனும்னு சொல்லி உங்களை கட்டாயப்படுத்துனதாவும், அதனால தான் நாங்க உதய சூரியன் சின்னத்துல போட்டியிட்டோம் அப்படின்னு வைகோ சொல்லி இருக்காங்களே அது உண்மையானு ஒரு செய்தியாளர் கேட்க, தவெக பக்கம் போவதற்கு பெட்டி படிக்கை எல்லாம் கட்டி தயாராக இருப்பதாகத் தான் அவருடைய பதிலில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அனால் தலைவர் வைகோ அவர்கள் தமிழக வெற்றி கழகத்துடைய தலைவர் விஜய், தமிழ் தாயின் தலைவன் பேரறிஞர் அண்ணாவோடு ஒப்பிட்டு பார்ப்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருச்சியில் அவர் போசும்போது  கூட போட்டி எங்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்குமானது தான்-னு  சொன்னதை ஒரு வரலாற்று நிகழ்வா நாம் வரவேற்றாலும், இந்த அல்லு  சில்லுகளுக்கு எல்லாம் இங்கு இடமில்லை என்று சொன்னால் அதில் மதிமுக-வும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

திராவிட முன்னேற்றத்துடைய தயவால் தான் தலைவர் வைகோ அவர்கள் 29 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் டெல்லி தர்பால் மன்றத்தில் அவர் களமாடினார் நாவாடினார். நான்கு முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் 24 ஆண்டு காலம், ஐந்த ஆண்டு காலம் மக்களவையில் பணியாற்றி ஏறக்குறை 29 ஆண்டுகள் அவர் நாடாளுமன்றத்தில் பணியாற்றினார் என்று சொன்னால் அந்த துரதஷ்டம் தான் அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தது. அவருடைய மகன் இன்றைக்கு திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அதற்கும் திராவிட முன்னேற்ற கழகம் தான் காரணம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

சின்ன குழந்தை மாதிரி தலைவர் வைகோ பேசுவது  ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம், எங்களுக்கு இத்தனை தொகுதிகள் கொடுத்தா தான் நிற்போம் என்று சொன்னார். அதே போன்று பொதுவுடமை இயக்கங்களும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள். மக்கள் நீதி மையம் எங்களுக்கான உரிய இடம் கிடக்கவில்லை எனவே நாங்கள் சுயமரியாதையோடு வெளியே நிற்கிறோம் என்று சொன்னார்.

சுயமரியாதை பற்றி வாய்கிழியே பேசுகின்ற தலைவர் வைகோ அவர்கள் ஏன் அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல் திராவிட முன்னேற்ற கழகத்துடைய  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என்பதை அவர் தான் சொல்லணும்.

ஒருவேளை திமுக இந்த நேரம் வெற்றி பெற்றிருந்தால்  தலைவர் வைகோ என்ன பேச்சு  பேசுவார் என்பது எங்களுக்கு தெரியும்.
இன்றைக்கு ஆட்சி இல்லை என்கின்ற காரணத்தினால் அவதூரை பரப்புவதும், சேட்டைவாரி பூசுவதும், தமிழக வெற்றி கழகத்தை, திராவிட வெற்றி கழகமாக நாங்கள் பார்க்கிறோம் என்று துரை வைகோ பேசுவதும் ஒருபோதும் திராவிட இயக்கத்தினர் ஏற்றுக்கொள்ளவே  மாட்டாங்க என்றும் தெரிவித்தார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் இருக்க கூடிய மல்லை சத்யா, தலைவர் வைகோ-வ இப்படி விமர்சிக்குரது மதிமுக தொண்டர்கள் மத்தியில சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *