கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க நிர்வாகிகள் கைது.!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் மதியழகன், கிளைச் செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கரூரில் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயமடைந்தனர். இந்தத் துயரம் தொடர்பாக இந்திய நியாயச் சட்டத்தின் நான்கு பிரிவுகளிலும், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் பிரிவிலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத் தவெக செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரை நேற்றுக் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தினர். இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *