செங்கோட்டையனால் பாஜகக்கு பாதிப்பு இல்லை, நயினார் நாகேந்திரன்!

Advertisements

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததால் பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில், செங்கோட்டையன் விலகல் – அதிமுக வாக்கு வங்கி சிதறுமா என்று கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை பொறுத்தவரை அதற்கென தனி வாக்கு வங்கி உள்ளது என்றும் பாஜக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை,” என்றார். இதை யடுத்து, விஜய்யின் தவெக திமுகவிற்கு மாற்றாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த நாகேந்திரன்,நடிகர் விஜய் இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை என்றும் தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபித்த பிறகு பார்க்கலாம் எனறும் தெரிவித்தார். இதை தொடர்ந்து, டிடிவி தினகரன் கூறியது போல மெகா கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மூன்றாவது அணி அமைந்தாலும், 2026-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *