
வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு 4 ஆயிரத்து 900 போ் அமரும் வகையில் பிரம்மாண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில், 4 ஆயிரத்து 900 போ் கலந்து கொள்வார்கள் என்றும், அனைவருக்கும் க்யூ.ஆா்.கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் தவெக சார்பில் தெரிவித்துள்ளது.
மேலும், கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட மேற்கூரையும் 4 ஆயிரத்து 900 போ் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகரம்சேரியில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன் தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
அப்போது, காவல் துறை அறிவுறுத்தியிருந்த 20 நிபந்தனைகளை பூா்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து, விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்காக 900 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் விஜய் என்ன பேசப் போகிறார் என தவெக தொண்டர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



