Advertisements

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை வெளியிடுகிறார். மேலும், வாக்காளர் பெயர்களைத் தேர்தல் ஆணைய செயலியில் மூலம் சரிபாரக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisements




