Advertisements

இந்தியாவை அவமதித்ததிற்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென தங்கள் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராகக் கோஷங்களை முழக்கமிட்டனர். பின்னர், அங்கிருந்தக் காவலர்கள் அவர்களை கைது செய்து வெளியேற்றினர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நமோ பாரத் ரயில் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில் டெல்லி மாநாட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை காங்கிரஸ் தனது தரம் தாழ்ந்த, நிர்வாண அரசியலுக்கு ஒரு களமாகப் பயன்படுத்தியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில், சட்டையைச் கழற்றிப் போராட்டம் நடத்தியதன் மூலம் காங்கிரஸ் கொள்கை அனைவரும் முன் பிரிதிப்பலித்துள்ளது என்றார். மேலும், இந்தியாவை அவமதித்ததிற்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisements




