தஞ்சாவூரில் இன்று விஜய் ஆலோசனை..!

Advertisements

தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யாச்சாமிபட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்து, அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர உள்ளார்.

இந்த கூட்டத்தில், 4 ஆயிரத்து 900 பேர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில், கியூ.ஆர். கோடுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து, வெயில் காரணமாக மேற்கூரை மற்றும அமர்வதற்கு வசதியாக நாற்காலி  உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பெண்கள்,கர்ப்பிணிகள்,வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் கூட்டத்திற்கு வரவேண்டாம் என தவெக சார்பில் தெரிவித்துள்ளது. இதில், 52 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *