அதிமுகவின் அடுத்தகட்ட மூவ் என்ன?

Advertisements

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளருக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை அருகில் உள்ள  அதிமுக தலைமையகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மாவட்டச் செயலாளருக்கான  ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, கூட்டத்தில்  கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் என பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் என்பதால் மற்ற கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *