இலக்கை எட்டும் வரை போர் ஓயாது..!

Advertisements

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது என்றும் அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழித்து அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது தான் இந்த போர் நடக்கிறது என்று கூறினார். தங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை போர் முடியாது என்றும் 4 அல்லது 5 வாரங்கள் வரை போர் நீடிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *