தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

Advertisements

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? ன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

விளாத்திக்குளம் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றித் செயல்படும் த.வெ.க. அரசு செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

ஆட்சியில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்று விமர்சித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினருக்கான  மருந்துகளை வழங்கச் சென்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அடிப்படைச் சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என்று வினவியுள்ளார். கட்சிப் பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? என்று வினவியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *