இனி திமுக Vs தவெக தான்..!

Advertisements

அண்ணா,எம்ஜிஆர் பிறகு விஜய் என்ற மூன்றெழுத்து தமிழகத்தில் எழுச்சியும் புரட்சியையும் ஏற்படுத்தப் போகிறது என மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி கலந்து கொண்டு பேசியபோது, தமிழக அரசியல் களம் என்பது இருமுனை தான் என்றும் தவெகவும் திமுகவும் தான் தவிர வெறு எந்த கட்சியும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அண்ணா,எம்ஜிஆர் பிறகு தமிழக தாய்மார்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று விஜய் என்ற மூன்றெழுத்து தமிழகத்தில் எழுச்சியும் புரட்சியையும் ஏற்படுத்தப் போகிறது என்றார். நாங்கள் வெற்றுக் கூட்டம் கிடையாது திமுகவை வீழ்த்தக்கூடிய வெற்றி கூட்டம் என்றும கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *