வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்காதே..!

Advertisements

செங்கல்பட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின்  9 ஆவது மாநாடு நடைபேற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் நால்வர் கோவில்பேட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட  9 ஆவது மாநாடு நடைபேற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை ஒழிக்க அடாவடியாக பெயர் மாற்றம் செய்து வேலையை முடக்கியதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்,ஆண்டுக்கு 200 நாள் வேலையும், தினக்கூலி நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் வழங்கிட வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.இதன் பின்னர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் குமார், செயலாளர் ரவி உள்ளிட்டோர் அடங்கிய 19 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட செயலாளர் ரஃபிக், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் கோதண்டம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *