தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம்..!

Advertisements

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, போதை பொருள் பழக்கம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் திமுக அரசு என்று முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆசூரில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது. இதில்,  கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜு, ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தேவானந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் சோமசுந்தரம் பேசியபோது, அண்ணா திமுக சாதனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடி வருகிறது என்றார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, போதை பொருள் பழக்கம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் திமுக அரசு என்று குற்றம் சாட்டினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டம், மானிய விலையில் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு மக்களுக்கு செய்து தரும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *