தவெக – வுக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பு…வெளியான சீக்ரெட் தகவல்.!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் கிங்மேக்கர் ஆக இருப்பார் என்று இலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவாகத் தெரிவித்துள்ளது. லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் அமைப்பினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

அந்த அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு பேசும்போது, தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் யார் என்று கேட்டதறகு மு க ஸ்டாலினையும், விஜயையும் பெரும்பாலானோர் தேர்வு செய்துள்ளதாகக் கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் கிங்மேக்கர் ஆக இருப்பார் என்றும், தவெக கூட்டணி 29 விழுக்காடு வாக்குகள் பெறும் என்றும் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முழுக்க முழுக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகவும் ஒருதலைப்பட்சமாகவும் உள்ளதாகச் செய்தியாளர்கள் கூறியதற்குப் பதில் அளிக்காமல் அவர் மழுப்பிவிட்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *