கனிமொழியும், கீதா ஜீவனும் பதவி விலக வேண்டும் – பாஜக போர்கொடி.!

Advertisements

தூத்துக்குடி மாணவிக்கு நடந்த அநீதிக்குத் திமுகவுக்குத் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ள பாஜகவின் சசிகலா புஷ்பா, கனிமொழியும், கீதா ஜீவனும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தத்தில் மர்மான முறையில் கொல்லப்பட்ட 17வயதுச் சிறுமியின் குடும்பத்திரைப் பாஜக சார்பில் முன்னாள் எம். பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளர் மீனாதேவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நடந்த 39-வது சம்பவம் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் என இரண்டு பெண்கள் இருக்கும் போது, இதுபோன்ற அராஜகம் நடைபெற்றுள்ளதாகவும், பெண்களுக்கு அவர்கள் மரியாதை கொடுப்பவர்களாக இருந்தால் இருவரும் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தினார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *