இந்தியா கூட்டணியால் மசோதா முறியடிக்கப்பட்டுள்ளது – ஸ்டாலின் பெருமிதம்.!

பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா, இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் மகளிர் இடஒதுக்கீடு என்ற முகமூடியுடன் பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா, இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது, பிரதமர் மோடி தனது 12 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்த முதல் தோல்வி என்று கூறினார். தொடர்ந்து, தமிழ்நாட்டை உரசிப் பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என தான் சொன்னது பலித்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும், பாஜகவிடம் அடிமையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பேசாமல் தனது கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்துவிடலாம் என்று விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *