7 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.! கவிப்பேரரசின் சாதனைகள்.!

Advertisements

கவிஞர் வைரமுத்து 60ஆவது ஞானபீட விருதைப் பெற்றதன் மூலம் தமிழ் இலக்கியம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இலக்கியத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது. 60ஆவது ஞானபீட விருதுக்குத் தமிழ்க் கவிஞர் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் இந்த விருதைக் காணிக்கையாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இனித் தனது பயணம் புதுப்பாய்ச்சலுடன் இருக்கும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *