Tamilaga Vettri Kazhagam: தோழர்களாய் ஒன்றிணைவோம்.. உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். கட்சிகுறித்த அறிவிப்பைக் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய், அதோடு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்போடு விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி உறுப்பினர் சேர்க்கையை மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் புதுவிதமாகச் செயலிமூலம் நடத்தி வருகிறது தமிழக வெற்றிக் கழகம். அந்தச் செயலிமூலம் 2 கோடி உறுப்பினர்களைக் கட்சியில் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *