
ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்தநிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அக்., 7 அன்று இஸ்ரேலுக்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன், அங்கு அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்தன.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில்,காசா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
காசா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,விமானப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனக்கூறியுள்ளது.ஹமாஸ் வெளியிட்ட செய்தியில், தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும், இந்த முகாமில் தங்கவில்லை, அப்பாவிகளை கொன்றதை மறைக்க இஸ்ரேல் பொய்யான செய்திகளை பரப்புகிறது எனக்கூறியுள்ளது.


