விறுவிறுப்பான அரசியல் களத்தில் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Advertisements

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும்..நான் என்றுமே Danger தான் இன்று காலை விடிந்ததுமே ஒரு பரபரப்பான ஒரு விஷயத்தை பேசி அதனை  வீடியோ – வாக பதிவிட்டுருக்காரு..அந்த வீடியோவில் அவர் என்ன பேசுனாரு என்பதன் பின்னணி தகவல்களை பற்றி பார்க்கலாம்..

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலைடன் நிறைவு பெறுகிறது அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம் ஊர்வலம் நடத்தக்கூடாது திரைப்படம் டிவி ரேடியோ whatsapp facebook twitter-யில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளை உள்ள நிலையில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பொதுமக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறிருப்பதாவது: அனைவரும் எப்படி இருக்கிறீர்கள் தமிழ்நாடு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.தமிழ்நாடு முழுவதும் நான் மக்களை சந்தித்து இருந்தாலும் இந்த வீடியோ மூலமாக சில விஷயங்கள் உங்களிடம் மனம் விட்டு பேச நினைக்கிறேன்.இன்னும் சில தினங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த சமயத்தில் என்னுடைய நினைவிற்கு ஒரு விஷயம் வருகிறது. 2021 நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஸ்டாலின் கருணாநிதியை விட ரொம்ப Danger என்று சில கூறினார்கள்.கலைஞரைவிட என்னை ஒப்பிட்டு பேச முடியாது. ஏன்னென்றால் அவரை அப்பா என்று அழைத்ததை விட தலைவர் என்று கூறியது தான் அதிகம்.தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றுமே Danger தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,உங்க எல்லாருக்கும் தெரியும் போன வாரம் ஒன்றிய அரசு டிலிமிடேஷன் ஒரு மசோதா கொண்டு வந்தாங்க. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி தொழில் வளர்ச்சியில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் இருக்கிற தமிழ்நாட்டை தண்டிக்கிறதுக்காகவே அந்த மசோதா கொண்டு வந்த மாதிரி இருந்தது. ஆனா அந்த மசோதா வந்து அடுத்த நொடி முதல் எதிர்த்தோம்.

மசோதாவோட நகல் எரித்தோம். நம்ம தமிழ் மண்ணில் என் மூலமாக ஆரம்பித்தது நாம கொளுத்துன நெருப்புதான்.. இன்னைக்கு கொழுந்து விட்டு எரிந்து அந்த மசோதாவை சாம்பலாக்கி இருக்கு . தேர்தல் சமயத்துல இவ்வளவு ஆணவத்தோட நம்மள வஞ்சிக்கு நினைக்குறாங்க..இந்த தேர்தல்ல அவங்க அடிபணிந்த எடப்பாடி பழனிச்சாமி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டா.. என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

பாஜக மாதிரி மதவாத சக்திகள் ,திமுகவ இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய்யான ஒரு பிரச்சாரத்தை பண்ணிட்டு இருக்காங்க.. திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. எங்கள் ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு பண்ணி இருக்கிறோம். 7000 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டு இருக்கிறோம்.

இப்படி பொய்யான பிரச்சாரம் பண்றவங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன். 60 வருஷமா திராவிட கட்சி ஆளுகிற தமிழ்நாட்டுல தான்.. இந்தியாவிலேயே அதிகமான கோயில்கள் இருக்கு.. இன்னைக்கு அதிமுக என்கிற அடிமைக் கட்சிக்கு ஓனர் பாஜக.. அவங்க ஆட்சி செய்கிற மாநிலங்கள்ல கிறிஸ்துமஸ் அன்னைக்கு சர்ச்சில் புகுந்து கலவரம் பண்றது இஸ்லாமிய மக்கள் வீடுகள் எரிக்கிறதுன்னு எவ்வளவோ கொடுமைகள் பண்றாங்க..

இதெல்லாம் தெரிஞ்சும் எடப்பாடி அவங்க காலில் விழுந்து கிடக்கிறார். ஆனால் சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சனைனா என்னைக்குமே நாங்க களத்தில் நிற்போம்.. அவங்க உரிமைக்காக போராடுவோம். 1971ல மிசா சட்டத்தை அன்றைய ஒன்றிய அரசு நடத்தினப்போ.. அதை எதிர்த்து போரிட்டு வந்தான் இந்த ஸ்டாலின்.அப்போ நான் ஒரு இளைஞன். கலைஞரின் மகன்.

இன்னைக்கு நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். இப்பவும் நமக்கு எதிரான போர எதிர்த்து நிற்கிறேன் .எந்த பிரச்சனை வந்தாலும் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன். இது என்னுடைய உறுதிமொழி எந்த வகையில் வந்தாலும் எத்தனை முறை முயற்சி பண்ணாலும் திமுக எடுக்கிற வரைக்கும் தமிழ்நாட்டுல பாஜகவும் அவருடைய கொடூரமான மக்கள் பிரதமர் ஜெயிக்க முடியலன்னு வரலாறு சொன்னால் போதும். அது மட்டும் போதும்.

நம்ம உரிமையை நம்ம உழைப்பை நம்ம மக்களுடைய கலாச்சாரத்தை நம்ம மொழி அளிக்கிறோம் என்று நினைக்கிறவங்களோ அவங்களோட அடிமைகளோ நமக்கு வேணாம். இந்த வளர்ச்சியும் பலமான எதிர்காலமும் அடுத்த அஞ்சு வருஷம் தொடரும். உங்க அப்பாவா, அண்ணனா ,தம்பியா ,ஒரு தோழனா, உங்ககிட்ட உரிமையோடு கேட்கிறேன். மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும் எங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்க நன்றி வெல்வோம் ஒன்றாக என்று கூறியுள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *