
சீனா ரகசியமான முறையில் அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சா் தாமஸ் நான்னோ குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா ரகசியமான முறையில் அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு துறைக்கான துணை அமைச்சா் தாமஸ் நான்னோ குற்றம் சாட்டினார். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், சீனா அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது என்றும் சோதனையை மறைக்கும் வகையில் நிலஅதிா்வு கண்காணிப்பின் செயல்திறனைக் குறைக்கும் முறையை சீனா பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்ற அணு ஆயுத சோதனை கடந்த 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது’ என்று கூறினார். இதன் மூலம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரா்களுக்கு இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலை அடுத்து ஒரு வாரத்துக்குப் பிறகு சீனா அணுஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது குறித்து சீன அதிகாரிகள் கூறுகையில், ‘போலியான குற்றசாட்டுகளை சீனா மீது அமெரிக்கா தெரிவித்து வருகிறது என்று கூறினர்.




