
விட்டுச்சென்ற கணவனை மீட்டு தரக்கோரி மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் பரிமளா (31). புதுக்கோட்டை மச்சுவாடி வஉசி நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கமாகி, பின்னர் அவரைக் காதலித்து வந்த நிலையில், ஒன்றை ஆண்டுக் காலம் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து 2022ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். திருப்பூரில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சதீஷ் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பின் மனைவியிடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனைவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவரை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார். மேலும், தீஷ் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து, தனது கணவரைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளில் நான்கு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், சதீஷை தன்னிடமிருந்து அவரது குடும்பத்தினர் தான் பிரித்திருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள சதீஷின் குடும்பத்தினர், பரிமளாவை விட்டுப் பிரிவது சதீஷின் தனிப்பட்ட விருப்பம், மேலும் இதுகுறித்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குடும்பத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

