தவெக- காங் கூட்டணி பேச்சுவார்த்தை : ராகுல் – விஜய் ரகசிய முடிவு; பரபரப்பு திருப்பம்.! 

Advertisements
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நட்சத்திரமான நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார் . ஆரம்ப கட்டத்தில் தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவில் களமிறங்கிய விஜய் பின்னாளில் ஏதாவது கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையை அறிந்து கொண்டார் .
இருந்தபோதிலும் முதல்வர் வேட்பாளர் என்ற வகையில் பல சிக்கல்கள் எழுந்தன . கடைசியாக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜக தரப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முயற்சிகள் மேற்கொண்டார் . ஆனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தரப்பில் ஆணித்தரமாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள் . தற்பொழுது அதிமுகவினரும் பாஜகவினரும் விஜயை எதிர்த்து காரசாரமாக பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாகவே காங்கிரஸ் சார்பில் கூட்டணி சேரலாம் என விஜய் முடிவு எடுத்திருந்தார்.  இது தொடர்பாக , டெல்லி மேலிடம் வரை பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. கேரளாவைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் இதனை முன்னெடுத்துச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரை கூட்டணி குறித்த பேச்சு வர்த்தை நடைபெற்றது . பின்னர் இந்த விவகாரம் தள்ளி போடப்பட்டது.
இது குறித்த செய்திகளை நமது ஜெம் தொலைக்காட்சி அப்போதே பரபரப்பு செய்தியாக வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம் . தற்பொழுது மீண்டும் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது . காங்கிரஸ் சார்பில் முக்கிய தலைவர் ஒருவர் விஜய் உடனும் தவெக முக்கிய நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் .
கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 69 தொகுதிகளில் போட்டியிட்டது.  ஆனால் இதன் பின்னர் கடந்த தேர்தலில் திமுக தரப்பில் 25 தொகுதிகள் தான் ஒதுக்கி தரப்பட்டது . மேலும் அமைச்சரவையிலும் இடம் தரப்படவில்லை . இதனால் தமிழக காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த அதிருப்திபில் இருக்கிறார்கள்.
தற்பொழுது தங்களுக்கு அதிகப்படியான தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் அமைச்சரவையிலும் இடம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால் இது குறித்து மு க ஸ்டாலின் தனது கருத்து எதையும் தெரிவிக்கவில்லை . இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி சேர்ந்து கொள்ளலாம் என கூறி வந்தனர் .
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மேல் இட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிக இடங்கள் வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கிறார் .
இதற்கிடையே கரூர் சம்பவத்தின் போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்பொழுது காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இது பற்றிய தகவல் ராகுல் காந்திக்கும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . ராகுல் காந்தியை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் திமுக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது . எனவே அவர் திமுகவை இழந்து விட விருப்பமில்லை. பீகார் தேர்தல் முடிவுகள் வரட்டும் அதன் பின்னர் இது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்துவிட்டார் .
இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிகிறது . வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ராகுல் காந்தி சென்னை வருகிறார் அப்பொழுது இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது .
ராகுல் காந்தியிடம் தமிழக காங்கிரசார்ர் பேச்சுவார்த்தை நடத்திய போது நிச்சயமாக திமுகவில் இருந்து அதிக தொகுதிகளை பெற்று விடலாம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.  ராகுல் காந்தி தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்திக்கு மு க ஸ்டாலினை இழந்து விட விருப்பமில்லை இது குறித்து தான் தற்போது முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது.
ஆனால் தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முயற்சிகள் நடைபெறுகிறது . தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் சரியான வேட்பாளர்கள் கிடைக்காத சூழ்நிலை நிலவுவதால் காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்த்துக்கொண்டு வேட்பாளர்களை நியமிக்கலாம் என ஆலோசனை செய்து வருகிறார்கள் .
மேலும் தமிழக வெற்றி கழகத்தில் காங்கிரஸ் கட்சி இணைந்தால் அறுபது தொகுதிகள் ஒதுக்கி தரப்படுவதாகவும் பேச்சு வார்த்தை நடத்து வருகிறது . இது பற்றிய தகவல் அனைத்தும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் தெரியவந்துள்ள நிலையில் ஒருவேளை காங்கிரஸ் கட்சியினர் திமுகவை விட்டு விலகினால் என்ன செய்வது என்பது குறித்தும் அவர் தீவிர ஆலோசனை செய்து வருகிறார் . அதே சமயம் அதிக தொகுதிகளை ஒதுக்கி தரவும் அமைச்சரவையில் இடம் தரவும் அவர் முன்வரவில்லை என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
எனவே தற்போதைய , சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைவதில் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. எதுவாக இருந்தாலும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *