Advertisements

டெல்லியில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்புதான் பின்னணியில் இருந்து செயல்பட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியான நிலையில் பிரதமர் மோடி இது குறித்து பேசும் போது குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார் .
இந்த நிலையில் கார் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமர் நபி பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ முகமது அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது . இது மட்டுமல்லாமல் தற்போது போலீஸ் வலையில் சிக்கி இருக்கும் இந்திய தீவிரவாத அமைப்பின் தலைவியான சாகின் சாகித் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் சார்பாகத்தான் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது
ஜெய்ஸ் இமுகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அன்சாரி என்பவர் ஆவார். அவரது சகோதரி சாதியா அசார். இந்த சாதியா அசார் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் மகளிர் பிரிவு தலைவியாக இருக்கிறார் . இவர்தான் இந்தியாவின் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவியாக சாஹின் சாஹித்தை நியமித்துள்ளார் .
தற்பொழுது கிட்டத்தட்ட ஐந்து டாக்டர்கள் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் சார்பில் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது . முன்னதாக இந்திய ராணுவத்திற்கு அதிரடி தரும்படியாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஜெய்ஸ் இமுகமது அமைப்பினர் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்லாமா பகுதியில் 28 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர் இதனை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சித்தூர் என்ற பெயரில் போர்க்களத்தில் இறங்கியது. இதில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் சாகின் சாகித்தை நியமித்த பாகிஸ்தான் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் மகளிர் பிரிவு தலைவியான சாதியா அசாரின் கணவர் யூசுப் அசாரம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கிடையே இந்திய முப்படை ராணுவம் சார்பில் ஆபரேஷன் திரிசூல் என்ற பெயரில் திடீரென எல்லைப் பகுதிகளில் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது . குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் இந்திய முப்படைகள் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளன .
பாகிஸ்தானை ஒட்டிய மேற்கு எல்லை பகுதிகள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும் இடையேயான சர்க்ரிக் என்ற பகுதி முதல் அரபிக்கடல் பகுதி வரை இந்த போர்பயிற்சி நடைபெறுகிறது
இதே சமயத்தில் பாகிஸ்தானை சேர்ந்த கடற்படையும் வட அரபிக் கடலில் தங்களது போர் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள் . ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரு நாடுகளும் போர் பயிற்சி மேற்கொண்டு உள்ளதால் உலக அளவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் கடல் போர் பயிற்சி மட்டுமல்லாமல் வான் வெளியை நோக்கிய பயிற்சிகளும் துப்பாக்கி சூடு பயிற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய ஏவுகணைகளை சோதனை செய்யும் கண்காணிப்பு வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன . போர் பயிற்சி எடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுப்பது சர்வதேச சட்டமாகும் . அந்த வகையில் மேற்படி குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு போர் பயிற்சி தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன என ஒரு மூத்த கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனடையே பாகிஸ்தான் கடல் படை தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரப் எல்லைப்புறச் சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். அங்குள்ள போர் படைகளின் திறனாய்வு எப்படி உள்ளது என அவர் பார்வையிட்டிருக்கிறார் . இந்த போர் பயிற்சியில் தரை மற்றும் தண்ணீரில் பயணிக்கக் கூடிய வகையில் அதிநவீன போர் விமானம் ஒன்றும் பாகிஸ்தான் தரப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது .
இந்தப் போர் விமானம் கப்பல் போன்றும் செயல்படும் வகையில் கடலுக்கு அடியில் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தனது தாக்குதலை நடத்தும் என தெரிய வந்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் மற்ற கப்பல்கள் வரக்கூடாது என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது . தற்பொழுது நடைபெற்று வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி எந்த ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்ல விரும்பவில்லை என தெரிகிறது .
இதற்கிடையே ஏற்கனவே சர்க்ரிக் பகுதியில் எல்லைப் பகுதி பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டினர் எந்தவித அத்துமீறலுக்கும் முயன்றால் வரலாறும் வரைபடமும் மாறும் வகையில் திட்டவட்டமான பதில் வழங்கப்படும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் எச்சரித்திருக்கிறார் . இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சர்க்ரிக் பகுதி என்பது 95 கிலோ மீட்டர் நீளமுள்ளது. தற்பொழுது இந்த பகுதி முழுவதும் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன .
அனேகமாக ஆபரேஷன் சிந்துருக்கு பிறகு ஆபரேஷன் திரிசூல் போர் ஏற்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது .
Advertisements


