
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாகவும், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்களோ என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. இதில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா 1 இடங்களும் ஒதுக்கி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது.
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழக கட்சிக்கு 2 இடங்களும் அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 33 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. நேற்று 16 இடங்களுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
* எங்களை பொறுத்தவரை மக்களுக்காக பணி, மக்கள் தான் எஜமானர்கள்.
* மதவாத இயக்கத்தைவிட அதிமுக ஆபத்தான கட்சி என விமர்சனம் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கண்டிக்கிறேன்.
* பாஜக கூட்டணிக்கு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
* தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள்… மக்களை தான் தேடி செல்ல வேண்டும்.
* திமுக அரசும், பாஜக அரசும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
* திமுக தேர்தல் அறிக்கை… இன்னும் எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவார்களோ.
* பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்போம் என்றார் செய்தாரா?
* சிலிண்டர் விலை குறைப்பு வாக்குறுதி திமுகவின் மற்றொரு முகம் என்று கூறினார்.


