
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியப்பட்டி கிராமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, கோவில் விழாவில் ஆபாச நடனம் அரங்கேறியது.மேடையில் பெண்கள் அரை குறையாக உடையணிந்து, ஆபாசமான சினிமா பாடலுக்கு நடனமாடினர்.இதைச் சற்றும் எதிர்பாராத பெண்கள் அங்கேருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஓமலூர் அருகே உள்ள பெரியப்பட்டி கிராமத்தில் ஓங்காளி அம்மன், மாரியம்மன் கோவில் தைத்திருவிழா நடைபெற்றது.இதையொட்டி நடன குழுவினரின் நடன நிகழ்ச்சிக்குத் திருவிழா கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.இதில், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பெண்கள் நடன நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.
மேடையில் பெண்கள் அரை குறையாக உடையணிந்து, ஆபாசமான சினிமா பாடலுக்கு நடனமாடினர்.இதைச் சற்றும் எதிர்பாராத பெண்கள் அங்கேருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஓமலூர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பெரியப்பட்டி கிராமத்தில் உள்ள ஓங்களியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சி என்கின்ற பெயரில் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து, ஆபாச நடனமாடியது பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த ஆபாச குத்தாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


