
மதுரை பாரபத்தியில் தவெக மாநாட்டை ஒட்டி பெரும் திரளான கூட்டம் கூடியுள்ளது. மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவாக மாணவ, மாணவிகள் வீடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு திடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு விஜய் நிதியதவிகளை வழங்கினார் .


