த.வெ.க. தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோரை சந்திப்பு!

Advertisements

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த வருடம் புதுக்கட்சியை தொடங்கினார்.

தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜயை சந்தித்து, த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

த.வெ.க.-வில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஆர். நிர்மல் குமார் என்பரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஐ.டி. பிரிவில் தலைசிறந்தவர்.

ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் த.வெ.க. கட்சிக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிராசாந்த கிஷோர்- விஜய் சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்தாகக் கூறப்படுகிறது.

அதனடிப்படையில் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *