தவெக ஆட்சியில் 6 மாதங்களில் 9 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக வி.த. லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் வி.த. லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியுடன் பேசி, நமக்கு வர வேண்டிய நீரைக் கொண்டு வருவது முதலமைச்சரின் கடமை என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், திமுக அரசு இரு மதங்களையும் தூண்டிவிட்டு, அதிகாரிகளை தலை குனிய வைத்து நீதிமன்றத்தில் இருமுறை தோற்றதாகத் தெரிவித்தார். தற்போது இருக்கும் விஜய் அரசும் அதே தவறை அப்படியே செய்வதாகக் குற்றம்சாட்டினார். எனவே திமுக எடுத்த அதே ஆயுதத்தை எடுத்து காற்று அடிக்கிறது, பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என காரணம் சொல்லாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் திறக்க வேண்டும், ஆனால் அப்பகுதி தவெக மாவட்டத் துணை செயலாளர் திறந்து விட்டு ரீல்ஸ் போடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். விலைவாசி 30 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நடுத்தர வாழ்க்கை வாழக்கூடியவர்கள் எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார். எனவே முதலமைச்சரின் கவனம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதை நோக்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தவெக ஆட்சியில் 6 மாதங்களில் 9 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


