கண்டமனூரில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் – தேனி சார் ஆட்சியர் திறந்து வைப்பு!

ஆண்டிப்பட்டியில் அருகே நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை தேனி மாவட்ட சார் ஆட்சியர் திறந்து வைத்தார்.

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில், சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டிடத்தை தனியார் நிறுவனம் சார்பில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. இதனை தேனி மாவட்ட சார் ஆட்சியர் தவ்லேந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் டிவி, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், இந்திய எழுத்தறிவு திட்டம் ஐஎல்பி மாநில ஒருங்கிணைப்பாளர் அழகேந்திரன், ஐஎல்பி மாவட்ட பொறுப்பாளர் கனிமொழி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *