எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றம் புதிய கருத்துகளை ஊக்குவிப்பதோடு, கலாச்சார ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, பேரரசுகள் உலகின் வரைபடத்தை மாற்றியிருக்கலாம், ஆனால் நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல்கள் உலகின் சிந்தனை முறையையே மாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, இந்த எஸ்சிஓ நாகரிக உரையாடல் மன்றம் என்பது வெறும் சடங்கு சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல, உலகிற்கு ஒரு புதிய திசையை காட்டும் தளமாக மாறக்கூடும் என்று தெரிவித்தார்.
உலகெங்கும் போர் மற்றும் அமைதியின்மை குறித்த விவாதங்கள் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், இந்தியாவில் நாங்கள் நாகரிக உரையாடல் மற்றும் இணைப்பு குறித்த முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மன்றம் புதிய கருத்துகளை ஊக்குவிப்பதோடு, கலாச்சார ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.



