நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா ஏ அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள மைதானத்தில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ – நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய கேப்டன் திலக் வர்மா 107 ரன்களும், குமார் 117 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதையடுத்து 333 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி 11 ஓவர்களில் 26 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில், மிகச் சிறப்பாக பந்து வீசிய பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா ஏ அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தி  அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *