உச்சநீதிமன்ற தீர்ப்பில் உடன்பாடில்லை – திருமாவளவன் அதிரடி அறிக்கை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள ‘அளவைக்கல்’ எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவைப்பட்டால் ‘மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்’ உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருப்பதாகக் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை என்றும் இதனை முற்றாக எதிர்க்கிறோம், இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமெனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *