வி.எஸ்.பாபு மரணத்தில் அரசியல் வேண்டாம் – ஜி.கே.வாசன் காட்டம்!

வி.எஸ்.பாபு மரணத்தை வைத்து தேவையற்ற சர்ச்சைகளையும் அரசியலையும் உருவாக்கக் கூடாது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அப்போது, கடந்த 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உயிரிழந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்தை வைத்து தேவையற்ற சர்ச்சைகளையும் அரசியலையும் உருவாக்கக் கூடாது எனத் தெரிவித்தார். தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், காவிரி நீர் பிரச்சனை என்பது விவசாயிகளின் பயிர் பிரச்சனை மட்டுமல்ல, அவர்களின் உயிர் பிரச்சனை என்றும், தமிழக விவசாயிகளுக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதுடன் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *