முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியாளர் விவகாரத்தில் எழுந்துள்ள புகார்கள் குறித்து அரசு வெளிப்படையான விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக மாவட்ட விவசாய அணித் தலைவர் பாலமுருகன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் அனுபவமின்மை காரணமாக, 45 நாட்களுக்கு முன்பே காவிரியிலிருந்து  தண்ணீர் திறந்துவிடப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அந்தத் தண்ணீரைத் தற்போது திறந்துவிட்டிருந்தால் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று கூறினார்.

தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த தவெக அரசு, தற்போது மிகக் குறைந்த அளவிலேயே கடன்களைத் தள்ளுபடி செய்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். ஆளும் தரப்பினர் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கலாச்சாரம் பெருகி காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியாளர் விவகாரத்தில் எழுந்துள்ள புகார்கள் குறித்து அரசு வெளிப்படையான விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *