
உக்ரைன் போர் மற்றும் உள்நாட்டு சதி குறித்த அச்சத்தால் ரஷ்ய அதிபர் புடின், ரகசிய பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், சொந்த நாட்டு செல்வந்தர்களின் சதி மற்றும் உக்ரைனின் ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் மாஸ்கோவை விட்டு வெளியேறிய அவர், கிராஸ்னோடர் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு கொண்ட ரகசிய பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்து அங்கிருந்தே போரை வழிநடத்தி வருவதாக தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு வல்லரசு நாட்டின் தலைவர், ராணுவப் புரட்சி மற்றும் கொலை முயற்சிக்கு அஞ்சி பதுங்கு குழிக்குள் முடங்கியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



