பிரதமர் பதவியில் இனி ஒரு நிமிடம் கூட நீடிக்க நெதன்யாகு தகுதியற்றவர் என்று இஸ்ரேல் எதிர்க்கட்சி கூட்டாணித் தலைவர் ஐசன்கோட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் அமர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நெதன்யாகு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஈரானிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேசிய ஒற்றுமையுள்ள அரசு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் ரா-அம், ஜாயிண்ட் லிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து ஓர் ஆபத்தான அரசை அமைப்பது முற்றிலும் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் ஐசன்கோட், நெதன்யாகுவின் பேச்சு பிளவுபடுத்தும், வெறுப்பு நிறைந்தப் பேச்சாக இருப்பதாகத் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு வெட்கப்பட வேண்டும் என்று கூறினார். எனவே பிரதமர் பதவியில் இனி ஒரு நிமிடம் கூட நீடிக்க நெதன்யாகு தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளார்.