பனையூரில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை அதிகரித்திருப்பதாகத் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் கட்சியின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில், பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை மற்றும் கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் செயல்படும் விதங்கள் ஆகியவைக் குறித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

