தவெகவை வெளுத்து வாங்கிய மேயர் பிரியா..என்ன காரணம்.?

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று தவெகவை மாநகராட்சி மேயர் பிரியா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.

அது யார் என்பது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார். இப்போது, அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல், இன்னும் எதற்கெடுத்தாலும் திமுகவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். ஆட்சி அமைத்து இத்தனை நாட்கள் ஆகியும் எந்த அமைச்சரும், எந்த சட்டமன்ற உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று கூறினார்.

மேலும், திமுகவை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள் என்றும் எதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறீர்கள் என்றும் வினவினார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *