தங்கப் பதக்கம் வென்ற தமிழக செஸ் வீராங்கனைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து.!

சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21 ஆவது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம், அவர் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ‘FIDE’ மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அரசு தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *