மனித ஆற்றலை மேம்படுத்தும் ஏஐ மையம்!

Advertisements

சென்னை:

 கல்வி, சுகா​தா​ரம், போக்கு​வரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்​பாடு​களில் மனித ஆற்றலை மேம்​படுத்​தும் வகையில், மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) மையம் சென்னை ஐஐடி​யில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: மனித ஆற்றலை மேம்​படுத்​தும் வகையில், மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) மையத்தைச் சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்​னால ஜிஸ் அறக்​கட்டளை தொடங்​கி​யுள்​ளது. தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு முக்​கி​யத்துவம் அளிக்​கக்​கூடிய தொழில் துறை 5.0 (இண்​டஸ்டரி 5.0) கொள்​கைகளு​டன், தொழில் முனை​வோர் மேம்​பாடு, மனிதவள மேம்​பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய​வற்றுக்கு உதவும் வகையில் இந்த மையம் செயல்​படும். இதில், மனித ஆற்றலைப் பெருக்க செயற்கை நுண்​ணறிவு பயன்​படுத்​தப்​படும்.

இணைய மோசடிகள், தவறான தகவல்கள் ஆகிய​வற்​றால் பாதிக்​கப்​படாத வகையில் குடிமக்களைப் பாதுகாக்கும் அம்சங்​களும் இதில் இடம்​பெறும். நம் நாட்​டின் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்பம் பாது​காப்​பாக, பொறுப்பு​மிக்​கதாக இருப்பதை உறுதி​செய்​யும் வகையிலும், இந்தத் துறையில் எதிர்கால விதி​முறைகளை வகுப்​ப​தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறியவும் இந்த மையம் உதவி​கரமாக இருக்​கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *