மூன்றே நிமிடங்கள் போதும் முழு சார்ஜ்: மின்சார வாகனங்களுக்கு புதிய சார்ஜரை வடிவமைத்த தூத்துக்குடி மாணவன்!

Advertisements

தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவர் மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் சார்ஜ் செய்ய கூடிய புதிய சார்ஜர் ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 3-ம் ஆண்டு இயற்பியல் படித்து வருபவர் கார்த்திக். சிறு வயது முதலே எலக்ட்ரிக் துறை மற்றும் எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் கொண்ட கார்த்திக் மின்சார வாகனங்களுக்கு மூன்றே நிமிடங்களில் சார்ஜ் செய்யும் வகையிலான சார்ஜரை கண்டுபிடித்துள்ளார்.

இதற்கு 1 யூனிட் முதல் 3 யூனிட் வரையிலான மின்சாரம் மட்டுமே செலவாகும் என்று கூறும் கார்த்திக். ரூ.15-ல் 60 கிலோ மீட்டர் வரை வாகனங்களை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் தனது கண்டுபிடிப்பை ஒன்றிய அரசின் எலக்ட்ரானிக் சோதனை டெவெலப்மென்ட் மையத்திலும், திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் சோதனை அடிப்படையில் செய்து காண்பித்து அதற்குரிய சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *