Pakistan: புதிய பிரதமர் பதவியேற்பு!

Pakistan | Anwarul Haque Kakkar | Interim Prime Minister

பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் நேற்று 18 அமைச்சர்களுடன் பதவி ஏற்றுக்கொண்டார்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் நேற்று 18 அமைச்சர்களுடன் பதவி ஏற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிந்ததும் ஆக.9ம் தேதி கலைக்கப்பட்டது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவி விலகினார்.

90 நாட்களுக்குள் அங்குத் தேர்தலை நடத்த வேண்டும். எனவே தேர்தலை நடத்தும் வரை இடைக்கால பிரதமராக அன்வருல் ஹக் கக்கர் நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 18 அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள். அவர்களுக்குப் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதியமைச்சராக ஷம்சத் அக்தர் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *