டிரான்ஸ்பார்மர் வெடித்து 15 பேர் மின்சாரம் தாக்கி பலி !உத்தரகாண்ட்டில் சோகம் !

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் இன்று வெடித்து சிதறியது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வேதனையையும் இரங்கலையும் தெரிவித்தார்.

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்வதாக கூறி உள்ள அவர், இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *