Advertisements

தூத்துக்குடி :
தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை, எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்குகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, புதிய ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இந்த ரெயில் வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும் என்றும், அதே போன்று மறுமார்க்கத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது. கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements


