Karaikal Mangani Festival : காரைக்காலம்மையாரின் மாங்கனி திருவிழா!

Advertisements

புதுச்சேரி  : காரைக்காலில் உள்ள காரைக்காலம்மையாரின் மாங்கனி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள அம்மையார் ஆலயத்தில், காரைக்காலம்மையாரின் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில், ஆடிமாத பிறப்பையொட்டி, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிவபெருமானை பூஜிக்கும் காட்சியில், வலது கையில் விளக்கும், இடது கையில் மணியுடன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மையாரின் அருள் பெற்று, அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *